Home இலங்கை கடலக மாலுமி கற்கைநெறியை பூர்த்தி செய்த்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

கடலக மாலுமி கற்கைநெறியை பூர்த்தி செய்த்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

by admin

இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தினால் கடலக மாலுமி கற்கைநெறிக்கு தேசிய தொழிற் தகைமைக்கான சான்றிதழ் மட்டம் – 04 இற்கு நடாத்தப்பட்ட மதிப்பீட்டு பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கும் மற்றும் கடற்பாசி வளர்ப்பு மற்றும் கடலட்டை வளர்ப்பு ஆகிய கற்கைநெறிகளில் சித்திபெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

யாழ் . மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இலங்கை சமுத்திர பல்கலைக்கழக யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கோ. அருள்சிவம் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வசந்த இரட்நாயக்க கலந்துகொண்டனர் . இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட செயலர் உரையாற்றுகையில்,

இப் பயிற்சி நெறியானது மாணவர்களுக்கான வரப்பிரசாதம் ஆகும். குறிப்பாக கடலக மாலுமிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளது. தீவுப்பகுதிகளுக்கான தரச் சான்றிதழ் பெற்ற கடலக மாலுமிகள் இல்லை. இது சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் காத்திரமான பங்களிப்பினை வழங்கும்.

அத்துடன்  கடற்பாசி வளர்ப்பு மற்றும் கடலட்டை வளர்ப்பு ஆகிய கற்கைநெறிகளில் சித்திபெற்ற மாணவர்களுக்கும் சிறந்த தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஒரு பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் பெறுவது என்பது இலகுவான விடயமில்லை. மாணவர்களை கெளரவப்படுத்த வேலைப் பளுவுக்கும் மத்தியிலும், கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு எமது நன்றிகள் என தெரிவித்தார்.

அத்ததுடன் எமது மாணவர்களுக்கான – கடலக மாலுமி களுக்கான தேசிய தொழில் தகைமைச் சான்றிதழ் மட்டம் 04 இனை மட்டம் 05 ற்கு உயர்த்துவதற்கான கற்கை நெறியினை நடாத்த வேண்டும் என கோரிக்கையையும் மாவட்ட செயலர் முன் வைத்தார்.

அதனை தொடர்ந்து மாவட்ட செயலரின்  கோரிக்கைக்கு அமைய, தேசிய தொழில் தகைமைச் சான்றிதழ் கற்கை நெறியின் மட்டம் 05 இனை நடாத்த நடவடிக்கை எடுப்பதாக இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வசந்த இரட்நாயக்க தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஶ்ரீமோகனன், இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தின் பயிற்சிக்கான பணிப்பாளர்   சந்தன குமார, யாழ் பல்கலைக்கழகத்தின் மீன்பிடித் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் கே. சிவசாந்தினி மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி.உ.தர்சினி, பிரதேச செயலாளர்கள், IOM நிறுவன இணைப்பாளர், சமுத்திர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டார்கள்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More