யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான மர பலகைகளை கடத்தி வந்த இருவர் சாவகச்சேரி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மல்லாவி பகுதியில் இருந்து டிப்பர் வாகனத்தில் அனுமதியின்றி மர பலகைகளை யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வந்த போது , சாவகச்சேரி காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த டிப்பர் வாகனத்தினை வழி மறித்து பலகைகளை மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து டிப்பர் வாகனத்தினை கைப்பற்றிய காவற்துறையினர் அதில் பயணித்த இருவரையும் கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவற்துறையினர் , அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.