180
சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் வீதியின் சில இடங்களில் காவோலைகள் போடப்பட்டு , அதன் மீது கற்கள் பரவப்பட்டு , வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வீதி புனரமைப்பின் போது , காவோலைகள் போடப்பட்டு கற்கள் பரவப்படும் முறையை தாம் முதல் முதலாக நேரில் காண்பதாகவும் , இதற்கு காரணம் என்ன என வீதி புனரமைப்பு பணியாளர்களிடம் கேட்ட போது , அதற்கு அவர்கள் விளக்கம் கூறவில்லை எனவும் , அதனால் உரிய தரப்பினர் இது தொடர்பில் விளக்கம் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
Spread the love