கடை தொகுதியை புதிதாக நிர்மாணிக்க தொடங்கிய போது, கடந்த 2000 ஆம் ஆண்டு யுத்தத்தில் கடைகள் அழிவடைந்த நிலையில் உள்ள வர்த்தகர்களுக்கு புதிய கடைத் தொகுதியில் முன்னுரிமை வழங்கப்படும் என நகர சபையால் உத்தரவாதமளிக்க பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த வாக்குறுதியை மீறி கேள்வி கோரப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விண்ணப்பதாரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்க வேண்டும் என்ற நிபந்தினையை உள்ளடக்க வேண்டும் எனக்கோரியுமே இந்தப் போராட்டம் இடம்பெற்றது. இதன்போது போராட்டக்காரர்கள் நகரசபையின் பிரதான நுழைவாயிலை பூட்டு பூட்டி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த சாவகச்சேரி காவல்துறையினர் பூட்டை உடைத்து அகற்றியதோடு போராட்டகாரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முனைந்தனர். அதன் போது, நுழைவாயிலை மறித்து நிலத்தில் அமர்ந்தவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டத்தய் அடுத்து குறித்த கேள்வி கோரலை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். அதனை அடுத்து வர்த்தகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


