Home இந்தியா நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் –   மூவர் மருத்துவமனையில்  

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் –   மூவர் மருத்துவமனையில்  

by admin

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து அக்கரை பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று (20)    3 மீனவர்கள்    கோடியக்கரைக்கு தென்கிழக்கே    மீன்பிடித்துக் கொண்டிருந்த  போது   அங்கு  2  படகில்  வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களது படகை வழி மறித்தது மீனவர்களை கத்தி மற்றும் கட்டையால் தாக்கி விட்டு படகில் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் இருந்து தப்பிய மூன்று மீனவர்களும் உடனடியாக   கோடியக்கரை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து சக மீனவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய்  சேர்த்துள்ளனர்.

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் மீன்பிடி வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன், மற்றும் மீன்பிடி உபகரணங்கள் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்றுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும  காவல்துறையினா்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More