யாழ் மாவட்டத்தில் கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகிய பிரதேசங்களில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த எலிக்காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
தற்போது எலிக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைவடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவா் இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முழு அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும் , தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால்தான் எலிக்காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்வும் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளாா்.
எலிக்காய்ச்சலினால் 08 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் 121 பேர் பாதிக்கப்பட்டுடிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது