உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமாகியுள்ளாா். 92 வயதான மன்மோகன் இன்று(26) ம் திகதி இரவு 8 மணி அளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக
அனுமதிக்கப்பட்ட அவா் . அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு 9.51 மணிக்கு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது
1991-1996 வரையிலான பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசாங்கத்தில் மன்மோகன் நிதியமைச்சராக பணியாற்றிய போதுதான் புதிய பொருளாதார கொள்கை இந்தியாவில் முதன் முதலாக அமுல்படுத்தப்பட்டது.
இன்று பாஜக அரசு பின்பற்றி வரும் தனியார் மயம் மற்றும் நவீன் தாராளமய பொருளாதார கோட்பாட்டுக்கு வித்திட்ட மன்மோகன் சிங், நவீன இந்தியாவின் பொருளாதார நிலப்பரப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியதாக தொிவிக்கப்படுகின்றது.
1991ம் ஆண்டு முதல் முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மோகன் சிங், 1998 முதல் 2004 வரை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார். கடந்த ஏப்ரலில் அவர் தன் நாடாளுமன்ற பயணத்தை முடித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. நாளை 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் கர்நாடகா மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.