47
பிரம்மனின் ஆணவத்தை அகற்றி, அருளொளி பரப்பிய சிவனின் திருவிளையாடல் நேற்றைய தினம் திங்கட்கிழமை நல்லூர் சிவன் கோவிலில் பிரம்ம சிரச்சேத உற்சவமாக நிகழ்த்தப்பட்டது. படைத்தல் கடவுளான பிரம்மாவின் ஆணவம் நீங்கும் வண்ணம் அவரது ஐந்தாவது தலையை சிவபெருமான் கிள்ளி அகற்றி, நான்முகனாக்கிய நிகழ்வு அட்ட வீரச்செயல்களுள் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.
‘பரமனை மதித்திடா பங்கையாசனன் ஒரு தலை கிள்ளியே..’ என்ற பாடலடி இப்புராண காலத்து நிகழ்வையே எடுத்துக்காட்டுகிறது.
Spread the love