இஸ்லாமிய மதத்தை அவதூறாகப் பேசியதற்காக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இதன்படி, ஒன்பது மாத சிறை தண்டனை விதித்த நீதிமன்ற கொழும்பு கூடுதல் நீதவான் பசன் அமரசேன, பிரதிவாதிக்கு 1,500 ரூபா அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.
ஜூலை 16, 2016 அன்று கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ”இஸ்லாம் ஒரு புற்றுநோய்… அதை ஒழிக்க வேண்டும்” என்று ஞானசார தேரர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன நல்லிணக்கத்தை மீறும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, தண்டனைச் சட்டத்தின் 291வது பிரிவின் கீழ் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸார் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.