42
தேசிய மக்கள் சக்தியினையும், ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்காவின் பெயரையும் பயன்படுத்தி அடாவடியாக, நிதிசேகரிப்பில் ஈடுபட்ட மதகுரு உள்ளிட்ட இருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்
கடந்த ஒரு வாரகாலமாக தேசிய மக்கள் சக்தியினையும், ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்காவின் பெயரையும் பயன்படுத்தி தம்மை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என அறிமுகப்படுத்தி இருவரும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அந்நிலையில் நேற்றைய தினம் நெல்லியடி நகரில் நிதிசேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது நிதி கொடுக்க மறுத்தவர்களை ஜனாதிபதியின் ஒளிப்படத்தைக் காண்பித்து, அச்சுறுத்தி நிதியை வலுக்கட்டாயமாக பெற முற்றப்பட்ட போது வர்த்தகர்களுக்கும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டோருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு கூடிய வர்த்தகர்கள் குறித்த நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டு நெல்லியடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை அடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
நிதிசேகரிப்பில் ஈடுபட்ட மதபோதகர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் சிறுவர்களைப் பராமரிப்பதற்காகவே இந்நிதி பயன்படுத்துவதாக தெரிவித்து நிதியை சேகரித்துள்ளனர். ஆனாலும் அதற்கான பற்றுச் சீட்டுக்கள் எவற்றையும் வழங்கியிருக்கவில்லை.
நிதிகொடுக்க மறுத்தவர்களை எலிக்காய்ச்சல் வந்து சாவாய் என்றும், அனுரவை நான் தான் யாழ்ப்பாணம் அழைத்து வந்தேன் எனவும் அனுர ஆட்களைப் பற்றித் தெரியும் தானே எனவும் அச்சுறுத்தினர் என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
Spread the love