மன்னார் சதோச மற்றும் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை(9) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது பாதிக்கப்பட்டோர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில்,,,
மேலும் யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவன் , மன்னார் காவல்துறையினா் ஆகியோரும் ல் முன்னிலையாகியிருந்தனர்.
இதன் போது ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் கையளிக்கப்பட்டது. 76 இலக்கம் தொடக்கம் 156 வரையிலான 80 பெட்டிகள் சட்ட வைத்திய அதிகாரியிடம் மேலதிக பகுப்பாய்விற்கு மன்னார் நீதவான் நீதி மன்றத்தினால் கையளிக்கப்பட்டது.
மிகுதி 75 எலும்புக்கூட்டு பெட்டிகள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை (10) கையளிக்கப்பட உள்ளது. இவை பகுப்பாய்வு செய்து மேலதிக அறிக்கைகள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.
கையளிக்கப்பட்டுள்ள ‘சதோச’ மனித புதைகுழி எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரியினால் இறப்புக்கான காரணம்,வயது,பால் நிலை போன்ற விடயங்களையும் இறப்பு ஏற்பட்டமைக்கான காரணங்களும் மன்றில் சமர்பிக்கப்பட உள்ளது. இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் சில தினங்களில் மன்றில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்