Home இலங்கை   ரஸ்ய சுற்றுலாப் பயணி கடலில் மூழ்கி உயிரிழப்பு

  ரஸ்ய சுற்றுலாப் பயணி கடலில் மூழ்கி உயிரிழப்பு

by admin

 

மட்டக்களப்பு –  பாசிக்குடா கடலில்  ரஸ்ய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று  இன்று (10) இடம்பெற்றுள்ளதாக  தொிவிக்கப்பட்டுள்ளது.   65 வயதுடைய ரூக் கரிசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  தொிவிக்கப்பட்டுள்ளது

இலங்கைக்கு சுற்றுலா பயணம்  மேற்கொண்ட குறித்த நபர்   இன்று காலை பாசிக்குடா கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடல் மூழ்கி தத்தளித்துக் கொண்டு இருந்ததனையடுத்து அங்கிருந்த கடற்படையினர் உடனடியாக செயற்பட்டு அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து  வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும்  அவர் உயிரிழந்துள்ளாா்.

இதனையடுத்து  சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக   தெரிவித்துள்ள  கல்குடா  காவல்துறையினா்  மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More