அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதுடன் பலா் காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை சுற்றியுள்ள 4 காடுகளில் ஏற்பட்டுள்ள இந்தக் காட்டுத்தீயினால் இருப்பிடங்களை விட்டு வௌியேறிய மக்கள் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தீயணைப்பு வீரர்கள் போல் நடித்து வீடுகளை சூறையாட வந்த இருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் கொள்ளையர்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது