யோஷித ராஜபக்ஸ எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முறையற்ற விதத்தில் சொத்துக்களை சோ்த்த குற்றச்சாட்டில் பெலியத்தையில் வைத்து நேற்று(25) காலை கைது செய்யப்பட் அவரை புதுக்கடை நீதவான் முன்னிலையில் நேற்று(25) மாலை முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஸ கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்ட விரோதமாக கிடைத்த 34 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி இரத்மலானை பகுதியில் காணியொன்றை கொள்வனவு செய்தமை தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய அவர் குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவைக்கமைவாக கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளாா்.
2006 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க நிதி தூய்தாக்கல் தடைச் சட்டத்தின் கீழ் குறிப்பிடக்கூடிய குற்றங்களை அவர் இழைத்துள்ளமைக்கான சாட்சியங்கள் காணப்படுவதால் சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.