105
யாழ் போதனா வைத்தியசாலை – மகப்பேற்று விடுதி (இலக்கம் 18) புதிய இடத்தில் செயல்படுகிறது என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுவரை 18ம் இலக்க மகப்பேற்று விடுதி வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலக கட்டடத்துக்கு அண்மையில் செயல்பட்டுவந்தது.
கடந்த திங்கட்கிழமை முதல், மருத்துவக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் தளத்தில் செயல்படுகிறது. எனவே மகப்பேற்று விடுதிகளில் தங்கி இருக்கும் கர்ப்பிணி தாய்மார்களை பார்வையிட வருவோர் நுழைவாயில் 6 மூலம் வருகை தரலாம் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Spread the love