88
சுகாதாரத்துறை மீது சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ‘சும்மா இருப்பதையே’ அதிகளவானர்கள் விரும்புகின்றனர் என பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் வை.திவாகர் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு நேற்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
இருக்கின்ற மனிதவளம் உள்ளிட்ட அனைத்து வளங்களையும் பயன்படுத்தி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மேம்படுத்தியுள்ளோம். சுகாதாரத்துறை மீது சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சுகாதாரத்துறை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பி வருகிறோம் என்பதனை அனைவரும் மறந்துவிட்டனர்.
நாட்டின் முதன்மை பிரச்சினையாக ஊழல் கூறப்பட்டாலும், வினைத்திறனற்ற பணியாற்றுகையே முதன்மையானது, ‘சும்மா இருப்பதையே’ அதிகளவானர்கள் விரும்புகின்றனர். அவர்கள் தொடர்பில் யாரும் அலட்டிக்கொள்வதில்லை என கவலையுடன் தெரிவித்தார்.
Spread the love