1. யாழ் போதானா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி உடனடியாக அமைக்கப்படல் வேண்டும்.
பருத்தித்துறை மூர்க்கம், முனை, கொட்டடி கடற்கரை, சுப்பர்மடம், இன்பர்சிட்டி கடற்கரை, சக்கோட்டை கடற்கரை, திக்கம் கடற்கரை, கொத்தியால் கடற்கரை, றேவடி கடற்கரை, ஆதிகோவிலடி கடற்கரை, தொண்டமனாறு கடற்கரை, பலாலி கடற்கரை, சேந்தான்குளம் கடற்கரை, மாதகல் கடற்கரை ஆகிய இடங்களில் படகுகள் தரித்துநிற்கும் இடங்களில் படகுகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புக் கல்லணைகள் அமைக்கப்படல் வேண்டும்.
படகுகள் நுழையும் பகுதிகளை ஆழமாக்குதல்:
மூர்க்கம் தொடக்கம் மாதகல் வரை படகுகள் தொழிலுக்காக இறக்கப்படும் நுழைவு வான்கள் நீண்டகாலமாக ஆழப்படுத்தப்படாமையினால் படகுகள் சேதமடைகின்றன. படகுகள் சேதமடைவதனை தடுக்கும் வகையில் குறித்த இடங்கள் உடனடியாக ஆழப்படுத்தப்படல் வேண்டும்.
கொத்தியால் கடற்கரையில் படகுகள் தரிப்பிடத்தில் அகழப்பட்ட மண்ணை அப்புறப்படுத்த நடவடிகை எடுத்தல்:
வல்வெட்டித்துறை கிழக்கு கிராமிய கடற்தொழில் அமைப்பினருக்குச் சொந்தமான படகுகள் தரித்து நிற்கும் பகுதியிலிருந்து அகழப்பட்ட மண் கடற்கரையிலேயே குவிக்கப்பட்டுள்ளது. அந்த மண் மீண்டும் மீண்டும் இறங்குதுறைக்குள்ச் சென்று படகுகள் நிறுத்தும் பகுதியை மூடுவதனால் படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்றுவதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இன்னமும் வழங்கவில்லை. எனவே குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை அண்மையிலுள்ள பொது அமைப்புக்களது பயன்பாட்டிற்காக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படல் வேண்டும்.
வீட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி போதாமலுள்ளது, அத்தொகை அதிகரிக்கப்படல் வேண்டும்.
வசாவிளான் சந்தியிலிருந்து பலாலி சந்தி வரையான வீதி பொது மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படல் வேண்டும்.
யாழ்ப்பாணம் மாவட்டம் முழுமைக்குமான பிரதான வடிகாலமைப்பு திட்டம் தயாரிக்கப்படல் வேண்டும்.
15. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இயக்கப்பட்டுவந்த குறிகாட்டுவான் – நைனாதீவுக்கான போக்குவரத்துப் பாதை பழுதடைந்த நிலையில் ஒருவருடமாகத் திருத்தப்படாமல் உள்ளது. அதனை உடனடியாகத் திருத்தப்படல் வேண்டும்.
நைனாதீவு தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இறங்குதுறை பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக அங்கு போக்குவரத்து இடம்பெறுவதில்லை. அந்த இறங்குதுறை திருத்தி அமைக்கப்படல் வேண்டும்.
குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து புங்குடுதீவு நோக்கிச் செல்லும் வீதி சுமார் 5 கிலோ மீற்றர் குன்றும் குழியுமாக உள்ளது. உடனடியாகத்திருத்தப்படல் வேண்டும்.