Home இலங்கை பிரபல வர்த்தகர்கள் கென் பாலேந்திரா, ஹெரி ஜயவர்தன ஆகியோர் காலமானார்கள்!

பிரபல வர்த்தகர்கள் கென் பாலேந்திரா, ஹெரி ஜயவர்தன ஆகியோர் காலமானார்கள்!

by admin

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதலாவது இலங்கைத் தலைவரான தேசமான்ய கந்தையா கென் பாலேந்திரா காலமானார்.

தமது 84ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

கென் பாலேந்திரா இந்த நாட்டின் வணிக உலகில் ஒரு மைல்கல் என்று விவரிக்கக்கூடிய ஒரு வணிகத் தலைவர் ஆவார்.

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்த காலத்தில், கென் பாலேந்திரா அதன் அனைத்து கட்டுப்பாட்டு நிறுவனங்களின் தலைவராகவும் பணியாற்றினார்.

அத்துடன் பாலேந்திரா சிலோன் டொபாகோ கம்பெனி, பிரெண்டிக்ஸ், யூனியன் அஷ்யூரன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் தலைவர் மற்றும் இயக்குநர் பதவிகளை வகித்துள்ளதுடன், இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவராகவும் (1998 – 2000) கடமையாற்றியுள்ளார்.

யாழ்ப்பாணம் – இணுவிலில் பிறந்த கென் பாலேந்திரா, கொள்ளுப்பிட்டி பகுதியில் வசித்து வந்ததுடன், கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.

கென் பாலேந்திரா தனது பாடசாலை நாட்களில் ரக்பி வீரராகவும் திறமைகளை வௌிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரபல தொழிலதிபர் ஹெரி ஜயவர்தன காலமானார்!

இலங்கையின் பிரபல தொழிலதிபர் ஹெரி ஜயவர்தன தனது 82ஆவது வயதில் காலமானார்.

ஹெரி ஜயவர்தன என்று பிரபலமாக அறியப்படும் டொன் ஹரோல்ட் ஸ்டாசன் ஜயவர்தன, Melstacorp PLC யின் தலைவராகவும், டென்மார்க்கிற்கான இலங்கை தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கையின் பணக்காரர்களில் ஒருவராக ஜயவர்தனவை Forbes பட்டியலிட்டிருந்தது.

அமெரிக்காவிற்கு வெளியே சிறப்பாக நிர்வகிக்கப்படும் நிறுவனங்களின் Forbes பட்டியலில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை நிறுவனங்களான Distilleries Company of Sri Lanka மற்றும் Aitken Spence ஆகிய இரண்டின் தலைவராகவும் ஜயவர்தன பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More