தம்புள்ளை-குருநாகல் பிரதான வீதியில் உள்ள தொரயாய பகுதியில் இன்று (10) காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட நால்வர் பலியாகியுள்ளனர். கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பேருந்து , பயணிகளை ஏற்றிச் செல்ல நின்றிருந்தபோது, அதே திசையில் சென்ற மற்றொரு தனியார் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக குருநாகல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்னால் இருந்து வந்த பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாகவும் பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதன் காரணத்தினாலே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களது அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் உடல்கள் குருநாகல் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தொரடியாவ காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்