Home இலங்கைதற்போதைய அரசாங்கம் பழிசுமத்துகிறதே தவிர மின்தடைக்கான காரணத்தைக் கண்டறிவதாயில்லை

தற்போதைய அரசாங்கம் பழிசுமத்துகிறதே தவிர மின்தடைக்கான காரணத்தைக் கண்டறிவதாயில்லை

by editorenglish

மின்வெட்டுக்கு முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது X கணக்கில் பதிவொன்றை இட்டு இதனை தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போதைய அரசாங்கம் உண்மையான பிரச்சினை என்ன என்பதை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கத் தவறியதும், குறைந்த தேவை காலங்களை நிர்வகிக்காத பலவீனமான நிர்வாகமும் மின்தடைக்கு முக்கிய காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More