Home உலகம்அமெரிக்காவில் கடந்த 2 வாரங்களில் விபத்துகளால் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கடந்த 2 வாரங்களில் விபத்துகளால் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

by editorenglish

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில்  அடிக்கடி  ஜெட் விமானங்கள்  செல்லும். இந்த விமான நிலையத்தில் இருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ள, கோல்ப் மைதானத்தில் வார இறுதி நாட்களில்  நடைபெறும் கோல்ப் போட்டி தொடரை காண்பதற்காக அதிக அளவில் கூட்டம் வரும். ரசிகர்கள் பலரும் ஜெட் விமானங்களில் வந்து செல்வார்கள்.

இந்நிலையில், இந்த விமான நிலையத்தில் 2 தனியார் ஜெட் விமானங்கள் மோதி  ஏற்பட்ட  விபத்தில் ஒருவர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர். ஒருவர் விமானத்தில் இன்னும் சிக்கியுள்ளார். இதனை தொடர்ந்து, நோயாளா் காவு வண்டிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று  மீட்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதுபற்றி மத்திய விமான போக்குவரத்து துறை நிர்வாகம் வெளியிட்ட செய்தியில், நடுத்தர அளவிலான ஜெட் விமானம் ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு ஜெட் விமானம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், மோதிய வேகத்தில் ஓடுபாதையில் இருந்து விலகி சென்றது என தெரிவித்து உள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 29-ந் திகதி, வர்த்தக ஜெட் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அமெரிக்க தலைநகர் வோஷிங்டன் டி.சி.யில் மோதி கொண்டதில் 67 பேர் உயிரிழந்தனர்.

ஜனவரி 31-ந் திகதி பிலடெல்பியாவில் மருந்து பொருட்களை ஏற்றி சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் அதில் இருந்த 6 பேரும் கொல்லப்பட்டனர். தரையில் இருந்த ஒருவரும் உயிரிழந்து உள்ளார். கடந்த வாரம், மேற்கு அலாஸ்காவில் சிறிய ரக விமானம் ஒன்று நோமி பகுதியில் விபத்தில் சிக்கியதில் அதில் இருந்த 10 பேரும் பலியானார்கள்.

கடந்த 2 வாரங்களில் இதுபோன்ற பெரும் விபத்துகளை அமெரிக்க விமான போக்குவரத்து துறை எதிர்கொண்டுள்ளது. இதுபற்றி துறை ரீதியிலான விசாரணையும் நடந்து வருகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More