இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையின் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதானி நிறுவனம் . இலங்கையில் உத்தேசிக்கப்பட்ட 2 காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களில் இருந்து விலகுவதாக இலங்கை முதலீட்டு சபையின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அதில் தொிவிக்கப்பட்டுள்ளது
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த அதானி குழுமம், அரசாங்கங்களின் ஒப்புதல்கள் மற்றும் முடிவுகளில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக இந்த தீா்மானத்தினை எடுத்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களினூடாக மின்சார செலவைக் குறைப்பதற்கு அதானி குழுமத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக கடந்த மாதம் இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது