Home இலங்கைமியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

by editorenglish

மியன்மாரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்குற்பட்ட 11 ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்கியுள்ளனர்.அவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் தாய்லாந்து எல்லையிலிருந்து பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.பின்னர் அவர்கள் இலங்கைக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.

இதற்கிடையில், ஏனைய நால்வரும் மின்மாரில் தனித்தனி சைபர்  சைபர் குற்ற  முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை விரைவில் மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More