குறித்த வகுப்புத்தடை குறித்து, மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக அண்மைக்காலம் வரை செயலாற்றிய சட்ட பீட மாணவனான சி.சிவகஜனால் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டது. அதனை அடுத்து தன்மீது பாரதூரமான அவதூறை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு சிவகஜன் செவ்வி வழங்கினார் என பேராசிரியர் ரகுராம் துணைவேந்தரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த வகுப்புத் தடையைச் சவாலுக்குட்படுத்தி யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலை பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு சட்டத்துறை மாணவன் சிவகஜனால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலையே மாணவன் மீதான வகுப்புத்தடை நீக்கப்பட்டுள்ளதாக மாணவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.