120
மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு பாதயாத்திரை முன்னெடுக்கப் படவுள்ளது. செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து பூசை வழிபாடுகளுடன் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கவுள்ள யாத்திரை எதிர்வரும் 26ம் திகதி திருக்கேதீச்சரத்தை சென்றடையவுள்ளது.
பாதயாத்திரையில் பங்கேற்க விரும்புவோர் 0776132176 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Spread the love