Home இலங்கைவலி- வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்

வலி- வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்

by editorenglish

,யாழ்ப்பாணம் வலி- வடக்கில் காவல்துறையினர் மற்றும் முப்படையினரிடமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதோடு அப்படி விடுவிக்கப்படுகின்ற காணிகளில் மக்கள் குடியிருப்புக்களை அமைத்துக்கொள்ள இசைவளிக்கப்பட‌ வேண்டுமெனப் பாதுகாப்பு அமைச்சுசார் குழுக் கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சுசார் குழுகூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட விடயங்களாவன;

யாழ் – வலி. வடக்கில் 2009ஆண்டு காவல்துறையினர் மற்றும் முப்படையினர் வசம் 23ஆயிரம் ஏக்கர் காணி காணப்பட்டது. இக்காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வந்தன. இதன்படி 21ஆயிரம் ஏக்கர் இதுவரை விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது 2640 ஏக்கர் காவல்துறை மற்றும் முப்படையினர் வசமுள்ளது. இக்காணிகள் மக்கள் பயன்படுத்தும் வகையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்திப் பேசினார்.

அத்துடன் பலாலி  – வசாவிளான்  சந்தி வரையான வீதி மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதுடன் முல்லைத்தீவு கேப்பாபிலவு காணி விடுவிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் கடற்றொழில்  அமைச்சர் முன்வைத்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட  இராணுவ உயர் அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட பகுதிகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More