234
யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவிருந்த இரண்டு மாபெரும் துடுப்பாட்டப் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி மோதும் 118வது வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்டப் போட்டி இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி மூன்று தினங்கள் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.
அதேபோல யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையில் 108வது பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் துடுப்பாட்டப் போட்டியும் நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் ஆரம்பிக்கவிருந்தது.
இந்நிலையில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக போட்டிகளை பிறிதொரு தினத்திற்கு பிற்போடுவதாகவும், துடுப்பாட்டப் போட்டி தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாடசாலை நிர்வாகங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love