Home இலங்கைசேவை ஏற்றுமதிக்கு 15% வரிவிதித்தால் அறிவு வளங்கள் நாட்டை விட்டுவெளியேறும்

சேவை ஏற்றுமதிக்கு 15% வரிவிதித்தால் அறிவு வளங்கள் நாட்டை விட்டுவெளியேறும்

by editorenglish

சேவை ஏற்றுமதிகள் மீதான அரசாங்கத்தின் அண்மைய‌ 15% வரிவிதிப்பு முறையை மறுபரிசீலனை செய்யக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் இணைந்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

பொருளாதார நெருக்கடியின் போது, தொலைதூர வேலைகளை நமது நாட்டிலிருந்தே இணையவழியாகச் செய்யும் வேலைகள் தான் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்ததுடன் அறிவுவளமானது நாட்டிலிருந்து வெளியேறுவதையும் தடுத்தது. இலங்கையானது டிஜிட்டல் வேலைகளுக்கான‌ சொர்க்கமாகத் தன்னை உலக முதலீடுகளுக்குச் சந்தைப்படுத்த முயற்சிக்கும் அதேநேரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவதென்பது முரண்பாடாகவுள்ளது. இந்த வரிவிதிப்பானது முதலீட்டாளர்களுக்குக் குழப்பமான செய்தியைச் சொல்வதுடன் எமது நாட்டின் போட்டித்தன்மையைக் குறைத்து மதிப்பிடுவதாக அமைகின்றது.

டிஜிட்டல் தொழில்முனைவோரைச் சோர்வடையச் செய்யும் இவ்வாறான வரிவிதிப்பு முறைகளைச் செயற்படுத்தும் இந்த அரசாங்கமானது எப்படி எமது தகவல் தொழினுட்பப் பணியாளர்களை வளர்க்கப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு சேவை ஏற்றுமதிக்கு 15% வரிவிதித்தால் அறிவு வளங்கள் நாட்டை விட்டுவெளியேறுவதுடன் எமது நாட்டின் தகவல் தொழினுட்பத்துறையானது போட்டித்தன்மையை இழந்து மிகவும் பாதிப்புறும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More