97
சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் நாளைய தினம் வியாழக்கிழமை புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
நாளைய தினம் ஆரம்பமாகும் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை வரையிலான மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
அதேவேளை, அருட் திரு G.A. பிரான்சிஸ் யோசப் வெற்றிக் கிண்ணத்துக்கான இருபதுக்கு இருபது (T-20) கிரிக்கெட் போட்டி மார்ச் 12 புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கும் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகும்.
அதேவேளை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி மோதும் 118வது வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்டப் போட்டி நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி மூன்று தினங்கள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
மத்திய கல்லூரி மைதானத்தில் நாளைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமாகும் துடுப்பாட்ட போட்டிகள் எதிர்வரும் சனிகிழமை வரையில் நடைபெறவுள்ளது.
கடந்த வாரம் நடைபெறவிருந்த குறித்த போட்டிகள் யாழில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டிருந்த நிலையில் நாளைய போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன
Spread the love