118
நெடுந்தீவில் காணப்படும் அரிய வகையிலான மருத்துவ மூலிகைகளை , வளப்படுத்தி அதன் ஊடாக அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் ஆளுநர் நா.வேதநாயகன் பணித்துள்ளார்.
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது. நெடுந்தீவில் 150 வகையான மருத்துவ மூலிகைகள் காணப்படுவதாக வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
அதனை அடுத்து , மூலிகைகளின் பயன்கள் , அவற்றினை எவ்வாறு வளப்படுத்த முடியும் எனது தொடர்பில் மக்களுக்குத் தெரியப்படுத்தி, அது தொடர்பிலான விழிப்புணர்வுகளை அவர்களுக்கு ஏற்படுத்தி அதன் ஊடாக வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
Spread the love