பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம். இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற பதம் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முரண்பட்டது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (05/03/2025) இடம் பெற்ற 2025 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கிழக்கில் அடிப்படைவாதம் என்ற கூற்றின் ஊடாக எம்மீது பழி சுமத்த பல தீயசக்திகள் முயற்சிக்கலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்த சக்திகள் நிச்சயம் முயற்சிக்கும். இவ்வாறான கூற்றுக்களை கொண்டு பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம்.எனவே இந்தக்கூற்றின் உண்மை தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

