அல்ஜசீராவில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் குறித்து ரணில் விக்ரமசிங்க,அதிருப்தி தொிவித்துள்ளாா். நேர்காணல் ஒளிபரப்பான சிறிது நேரத்திலேயே இது தொடா்பில் அவா் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளாா்.
அல்ஜசீரா தொகுப்பாளர் மெஹ்தி ஹசனுடன் இணைந்த மூன்று குழு உறுப்பினர்களில் இருவர் விடுதலைப் புலிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என அவா் தொிவித்துள்ளாா்.
“மனித உரிமைகள் வழக்கறிஞரும் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையருமான அம்பிகா சத்குணநாதன் இந்த விவாதத்தில் பங்கேற்பார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. எங்கள் சித்தாந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், நான் அவரை அறிந்திருப்பதால், அதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். இருப்பினும், பின்னர் அவருக்குப் பதிலாக விடுதலைப் புலிகள் ஆதரவு குழுக்களுடன் தொடர்பு கொண்ட இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதை அறிந்தேன்,” என அவா் குறிப்பிட்டுள்ளாா்.
நேர்காணலின் வடிவத்தையும் விமர்சித்த அவர் தனது பதில்களின் முக்கிய பகுதிகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளாா்.
“நான் உள்ளூர் ஊடகங்களுடன் பேசும்போது, அது நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது, எனவே நல்லது கெட்டது இரண்டும் வெளிவரும். இருப்பினும், அல் ஜசீரா இரண்டு மணி நேரம் என்னை நேர்காணல் செய்தது, ஆனால் ஒரு மணி நேர பகுதியை மட்டுமே வெளியிட்டது, அதில் பெரும்பகுதியைத் திருத்தியது” என்று அவர் தொிவித்துள்ளாா்.