Home இலங்கைசட்டவிரோத ஆயுதங்களைக் கைப்பற்ற உதவுவோருக்கு வெகுமதிகள்

சட்டவிரோத ஆயுதங்களைக் கைப்பற்ற உதவுவோருக்கு வெகுமதிகள்

by editorenglish

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

ரீ – 56 ரக துப்பாக்கியை தம்வசம் வைத்திருக்கும் சந்தேகநபரை கைது செய்யும் காவல் உத்தியோகத்தருக்கு 10 இலட்சம் ரூபாவும், தகவல் வழங்குபவர்களுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

சந்தேகநபரின்றி துப்பாக்கி மாத்திரம் மீட்கப்பட்டால் காவல‌ருக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், தகவல் வழங்கும் நபருக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கைத்துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டால் காவலருக்கு 4 இலட்சம் ரூபாவும், தகவல் வழங்குனருக்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும்  கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைதானால் காவல‌ருக்கு 50 ஆயிரம் ரூபாவும், தகவல் வழங்குனருக்கு 30 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More