Home இலங்கைகுமாரபுரத்தில் காவல்துறையினர் இனப்பாகுபாட்டுடன் நடக்கின்றனா்

குமாரபுரத்தில் காவல்துறையினர் இனப்பாகுபாட்டுடன் நடக்கின்றனா்

by editorenglish

மூதூர் காவல்துறையினரால் குமாரபுரம் பகுதியில் வைத்து 6 பிள்ளைகளின் தந்தையான நாகராசா லிங்கேஸ்வரன் (வயது 44) என்பவர் கைது செய்யப்பட்டு   தாக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

குறித்த நபர் மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு  சனிக்கிழமை (08/03/2025) பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் 24.02.2025 அன்று ஏற்பட்ட விபத்து சம்பவத்தின் பின்னர் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்பு பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை (07/03/2025) மூதூர் காவல்துறையினரால் குமாரபுரம் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

 சட்டத்திற்கு முரணான வகையில், அடிப்படை உரிமையை மீறும் வகையில் தனது கணவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தனது கணவனுக்கு நீதி கோரி அவரது மனைவியால் வெள்ளிக்கிழமை (07/03/2025) திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடா்ந்து  குறித்த அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மூதூர் காவல்நிலையப் பொறுப்பதிகாரியின் மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் கோரியுள்ளனர்.

கடந்த 24.02.2025 அன்று குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தின் பின்னர் ஏற்பட்ட கைகலப்பில் காரணமாக தெகிவத்தை பகுதியில் இருந்து 30 க்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இளைஞர்கள் தமது கிராமத்திற்கு நுழைந்து தாக்குதல் மேற்கொண்டு இருந்ததாகவும் இதன்போது தமது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தற்பாதுகாப்பிற்காக திருப்பித் தாக்கியதோடு தப்பியும் ஓடியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளாா்..

இதனைத் தொடா்ந்து  அவ்விடத்திற்கு வருகை தந்த மூதூர் காவல்துறையினர் தெகிவத்தைப் பகுதியைச் சேர்ந்த 4 பேரையும், குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தது டன் இரு தரப்பிலும் சிலரைத் தேடியும் வந்தார்கள்.

பின்னர் இரு தரப்பினரும் சமாதானமான முறையில் இணக்கப்பாட்டுக்கு வந்த நிலையில் கடந்த 28.02.2025 அன்று கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்ட இருந்தார்கள்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (07/03/2025) பாலர் பாடசாலையில் பிள்ளையை விட்டு திரும்பி வரும் வழியில் மூதூர் காவல்துறையினர் தனது கணவனை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று எனது கணவரின் தலை, கை, கால் ஆகிய பகுதிகளில் மிகவும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அத்துடன் 30 பேருக்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் எமது ஊருக்குள் வந்து தாக்குதல் மேற்கொண்ட போதும் வெறும் 4 பேர் மாத்திரம் கைது செய்து பிணையில் விடுவித்தும் ஏனையவர்களை கைது செய்யாமல் குமாரபுரம் மக்கள் மீது தமது அதிகாரத்தை பிரயோகித்து ஒரு பக்கச் சார்பாக காவல்துறையினர் நடந்து கொள்வதாகவும் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் திருமதி லிங்கேஸ்வரன் முனீஸ்வரி என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More