பாகிஸ்தானில் சுமார் 400 பயணிகள் பயணம் செய்த புகையிரதம் ஒன்றை கடத்தியுள்ள பலோச் விடுதலை ராணுவம் எனும் கிளர்ச்சியாளர்கள் குழு அதிலிருந்த பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த 100 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக வும் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பலோசிஸ்தான் மாகாணத்துக்கு பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் கோரி அங்கு பலோசிஸ்தான் சுதந்திர ராணுவம் கிளச்சியாளர் குழு ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், புகையிரதத்தினை ஒன்றை கடத்தியுள்ளதாக கிளர்ச்சியாளர் குழுகூறியுள்ளது கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவர் நகரில் இருந்து பலோசிஸ்தானில் உள்ள குவெட்டா நகருக்கு சென்று கொண்டிருந்த . 9 பெட்டிகள் கொண்ட ஜாபர் எக்ஸ்பிரஸ் என்ற புகையிரமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.
மேலும் . பாகிஸ்தான் ராணுவம் தங்களுக்கு எதிராக நடவடிக்கையை ஆரம்பித்தால் பணயக்கைதிகள் கொல்லப்படுவார்கள் எனவும் இந்த குழு எச்சரித்துள்ளது.
கிளர்ச்சியாளர்கள் தண்டவாளத்தை தகர்த்து புகையிரதத்தினை நிறுத்த வைத்ததன்பின்னா் அவர்கள் புகையிரதத்தில் ஏறி அதனைக் கைப்பற்றியதாகவும் சொல்லப்படுகிறது. இதேவேளை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த புகையிரதத்தில் பாதுகாப்பு படையினர் சென்றதாகவும் அவர்களில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் பலோச் விடுதலை ராணுவம் அறிவித்துள்ளது.