Home இலங்கைவிந்தன் கனகரட்ணம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் இணைந்தார்

விந்தன் கனகரட்ணம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் இணைந்தார்

by editorenglish

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) நீண்டகாலமாக செயற்பட்டுவந்த விந்தன் கனகரட்ணம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்பினராக இணைந்துகொண்டார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தனது கல்வியங்காடு அலுவலகத்தில் வைத்து விந்தன் கனகரட்ணத்திற்கான கட்சி உறுப்புரிமையை வழங்கி வைத்தார்.

வடக்கு மாகாணசபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, யாழ் மாநகரசபைகளில் முன்னாள் உறுப்பினராக விந்தன் கனகரட்ணம் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது விந்தன் கனகரட்ணத்தின் புதல்வனும் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவனுமான வி.கே.மார்க் அன்ரனியும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் இணைந்து கொண்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More