43
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை ஜூலை 14 ஆம் தேதி ஹங்குரன்கெத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு மதுவரி அனுமதிப்பத்திரம் (Liquor License) பெற்றுத் தருவதாக உறுதியளித்து, ரூ. 2 கோடியே 75 இலட்சம் (27.5 மில்லியன்) மோசடியாகப் பெற்றுக்கொண்டதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, அதன் நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது.
விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில், 58 வயதுடைய ஜெயலத் பண்டார திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று (15) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love

