பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொத்துக்களையும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களையும் முடக்குவதற்கு டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவரது குடும்பத்திற்குச் சொந்தமான 124 வங்கிக் கணக்குகளையும் முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் எதாிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷின் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை அடுத்து டாக்கா நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதி சாகிர் ஹுசைன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்
மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் பங்களாதேஷில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையடுத்து 77 வயதான ஷேக் ஹசீனா கடந்த ஓ கஸ்ட் 05 ஆம் திகதி இந்தியாவில் அரசியல் தஞ்சமடைந்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது