65
யாழ்ப்பாணம் , காரைநகர் பலநோக்கு கூட்டுறவு சங்க கிளையில் கட்டுப்பட்டு விலைக்கு அதிகமான விலையில் அரிசியை விற்பனை செய்த குற்றத்திற்காக ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிளையில் அரிசி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர் அதிகார சபையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட போது, அரிசி அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
அதனை அடுத்து, பாவனையாளர் அதிகார சபையினரால் , பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு எதிராக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த வழக்கு, பதில் நீதவான் ஷாலினி ஜெயபாலசந்திரன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த குற்றத்திற்காக ஒரு இலட்ச ரூபாய் தண்டம் அறவிடப்பட்டது
இதேவேளை யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 56ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது
கோண்டாவில் பொது சுகாதார பரிசோதகர் க. ஜெயகாந்தன் தலைமையிலான குழுவினர் கடந்த 19ஆம் திகதி தமது பகுதியில் உள்ள உணவகங்களில் திடீஸ் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதன் போது, சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களை கண்டறிந்ததுடன் , அவற்றில் ஒரு உணவகத்தில் இருந்து காலாவதியான பொருட்களும் மீட்கப்பட்டன.
அதனை அடுத்து குறித்த உணவகங்களுக்கு எதிராக யாழ் . மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் , மூன்று உணவாக உரிமையாளர்களும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஒரு உணவகத்தில் காணப்பட்ட சீர்கேடுகளை சீர் செய்யும் வரையில் அதற்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் , மூன்று உணவகங்களுக்கும் 90 ஆயிரம் ரூபாய் , 36ஆயிரம் ரூபாய் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் என ஒரு இலட்சத்து 56ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளார்.
Spread the love