கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட நாடாளுமன்ற புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (27) முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவருக்கு எதிராக 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒரு வழக்குக்கு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஏனைய இரண்டு வழக்குகளிலும். ஏப்ரல் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாக்குமூலமளிக்க அவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வியாழக்கிழமை (27.03.25) சென்றிருந்தார்.
விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவரை, கொழும் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, ஒரு வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஏனைய இரண்டு வழக்குகளிலும் ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண அமைச்சராக சாமர சம்பத், இருந்த போது நடந்ததாக கூறப்படும் முக்கியமான மூன்று முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.