உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக அஞ்சல் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் காவற்துறை மற்றும் முப்படையினருக்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (05.04.25) நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர்,
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் கடமைகளில் காவற்துறை மற்றும் முப்படையினர்கள் சிறப்பாக கடமையாற்றியதாகவும் அதற்கான நன்றியினைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு, இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல்கள் கடமைகளிலும் எம்முடன் இணைந்து ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இச் செயலமர்வில் உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலில் அஞ்சல் மூல அத்தாட்சிப்படுத்தும் காவற்துறை மற்றும் முப்படைகளின் அலுவலர்களின்
கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக, தேர்தல் ஆணைக்குழுவின் திட்டமிடல் பணிப்பாளர் சந்தன டி சில்வா, பிரதி ஆணையாளார் கே. ஜே. எஸ். மகாதேவ மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர் இ. சசீலன் விளக்கமளித்தனர்.
இச் செயலமர்வில் நியமிக்கப்பட்ட அத்தாட்சிப்படுத்தும் காவற்துறை மற்றும் முப்படையினர்களின் அலுவலர்கள் கலந்து