134
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் செல்லும் நுழைவாயில்கள் நான்கு பிரதான வீதிகளிலும் வீதி வளைவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனொரு கட்டமாக வடக்கு புறமாக கோவில் வீதியில் வீதி வளைவு அமைக்கப்படவுள்ளது.
அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
இதன்போது ஆலய நிர்வாகத்தினர், யாழ் மாநகர ஆணையாளர், அப்பகுதி மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Spread the love