யாழ்ப்பாணத்தில் எறும்பு கடிக்கு இலக்கான பிறந்து இருபத்தியொரு நாளேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.
ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது.
குறித்த சிசுவிற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் எறும்பு கடித்த நிலையில் அதனை பெற்றோர் கவனிக்காமல் விட்டதன் காரணமாக நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை பால் குடித்த சிசு மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனையில் , எறும்பு கடித்ததன் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு உடற்கூறுகளின் செல்கள் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுமுறைக்காக யாழ்ப்பாணம் சென்ற மகளை அழைக்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழப்பு!
பேராதெனிய பல்கலைக்கழத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் சென்ற வேளை அவரை அழைக்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக் கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகாமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பலாலி கிழக்கு, பலாலியைச் சேர்ந்த கந்தவனம் செல்வநாயகம் (வயது- 62) என்பவர் உயிரிழந்துள்ளார்.
பேரதெனியா பல்கலைக்கழகத்திலிருந்து புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணத்துக்கு பேருந்தில் சென்ற மகளை அழைத்து செல்வதற்காக அதிகாலை பலாலியில் உள்ள தனது வீட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மழை பெய்து கொண்டிருந்த நிலையில், பழுதடைந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.