Home இலங்கை ஜே.வி.பியின் உண்மையான தோற்றம் வெளி தெரிகிறது

ஜே.வி.பியின் உண்மையான தோற்றம் வெளி தெரிகிறது

by admin

அனைவரும் சமம் என கூறும் அனுர தரப்பினர் அவர்களுக்குள் மறைந்திருக்கும் ஜே.வி.பி  என்ற தோற்றத்தின்  உண்மையான இயல்பை தற்போது காட்ட தொடங்கியுள்ளனர் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் அனைத்தும் மேன்முறையீட்டு நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதை நடைமுறைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. இதேநேரம் சொல்லளவில் அனைவரும் சமம் என கூறும் அனுர தரப்பினர் அவர்களுக்குள் மறைந்திருக்கும் JVP என்ற தோற்றத்தின்  உண்மையான இயல்பையே காட்டுகின்றது. இதை  இன்று நேரடியாகவே கண முடிகின்றது.

இதேவேளை ஏற்கனவே திறந்துவிடப்பட இருந்த வீதிகளையே இன்று யுத்த காலத்தில் இருந்ததைவிட மிகவும் கடுமையான நிபந்தனைகளுடன் திறந்துவிட்டு வாக்குக்காக நாடகமாடுகின்றனர்.இதேநேரம் இதுவரை எந்தவொரு ஊழலையோ முறைகேடுகளையோ கட்டுப்படுத்தவோ இல்லை.அதைவிட தேர்தல் கால நடைமுறை மீறல்களை தேர்தல் திணைக்களத்திடம் ஆதாரத்துடன் கூறிக் கூட கைது செய்யவில்லை.

அத்துடன் உளூராட்சி மன்றங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண சபைக்கே உள்ளது. அது மத்திய அரசுக்கானதல்ல.
இதேநேரம் மாகாண சபை என்பது பல இலட்சம் உயிர்களின் தியாகத்துக்கு கிடைத்த சில உரிமைகளுள் ஒன்று. இதை மீண்டும் மத்திக்கு கொடுத்தால் இருப்பதையும் இழக்கும் நிலை மறுபடியும் தமிழருக்கு ஏற்படும். இதனிடையே பொதுத்தேர்தலில் யாழ்பாணத்திலிருந்து மத்திக்கு 3 நாடளுமன்ற உறுப்பினர்களை கொடுத்ததால் தமிழ் மக்களின் அரசியல் விடயங்கள் தொடர்பில் தங்களே தீர்மானிப்போம் என்ற மமதையுடன் இன்று பேசுகின்றனர் .

இவ்வாறான நிலையில் இப்போதுள்ள அரசியல் அமைப்பில் இருக்கின்ற குழப்பங்களுக்கு தீர்வு காணவேண்டும் என கூறினார்கள், நாட்டுக்கு ஒரு புதிய அரசியலமைப்பு அவசிம் தேவை என்றார்கள். ஆனால் அதற்கான பலமிருந்தும் அதை இவர்கள் கொண்டு வருவார்கள் என்பது சந்தேகம்.

இதேநேரம் நாங்கள் மாகாணத்துக்கு இருக்கின்ற குறைந்தபட்ச அதிகாரங்களை முழுமையாக நிறைவேற்றி அதன் பின்னர் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என கூறுகின்றோம்.  அத்துடன் உள்ளூராட்சி மன்றங்கள் எமக்கான வலுவான அதிகாரமாகும். இதை தமிழ் மக்கள் தமக்கானதாக உறுதி செய்வது அவசியம்.இவ்வாறான பின்னணியில் NPP யின்  பித்தலாட்டம் மக்களுக்கு தெரியவந்துள்ளது.

இதேநேரம் கடற்றொழில் அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கா அல்லது இலங்கைக்கா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.குறிப்பாக அமைச்சர் தரத்தில் சந்திரசேகரனின் சொற்பிரயோகங்கள் இருப்பது அவசியம். அவர் அதை நினைவில் கொள்ளாது செயற்படுவதும் கவனத்தில் கொள்வது அவசியம்.ஒரு தரப்புக்கு ஒரு நியாயம் இன்னொரு தரப்புக்கு மற்றொரு நியாயம் என தேர்தல் ஆணையகம் இருக்கக்கூடாது என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More