Home இலங்கை மர்மமாக உயிரிழந்த சிறுவன் – உடற்கூற்று பாகங்கள் கொழும்புக்கு!

மர்மமாக உயிரிழந்த சிறுவன் – உடற்கூற்று பாகங்கள் கொழும்புக்கு!

by admin

யாழ்ப்பாணத்தில் சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் , சிறுவனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சசிதரன் திசானுஜன் (வயது 15) எனும் சிறுவன் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளான்.
சிறுவனின் உடல் பாகங்களில் திடீரென வீக்கங்கள் ஏற்பட்டமையால் , கடந்த 20ஆம் திகதி சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வந்தான்.
அந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (05.05.25)  சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மரணத்திற்கான காரணம் தெரியாத நிலையில், உடற்கூற்று பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More