150
வடக்குக்கான போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாக கடற்படை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் எஸ்.ஜே.குமார, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது யாழ். மாவட்டத்திலுள்ள கடல் கடந்த தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பிலும், கடல் வழியான போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
Spread the love