முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி பகுதியில் இன்று புதன்கிழமை (21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 9 வயதான பாடசாலை மாணவி ஒருவர் உயிரிந்துள்ளார். நடமாடும் முச்சக்கர வாகனத்தில் பனிஸ் வாங்க சென்ற போது சிறிய ரக லொறி ஒன்று மோதியதில் குறித்த சிறுமி விபத்துக்குள்ளானதாகவும் விபத்தில் காயமடைந்த சிறுமி முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் முல்லைத்தீவு கொக்கிளாய் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
சம்பவத்தில் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபரான லொறியின் சாரதி ஏற்கனவே ஒருவர் இறப்பதற்குக் காரணமானவா் எனும் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என தொிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கிளாய் காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.