Home இலங்கைஅச்சுவேலியில் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள் – 97 கோழிகள் உயிரிழப்பு!

அச்சுவேலியில் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள் – 97 கோழிகள் உயிரிழப்பு!

by admin
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு கோழிகளுக்கு விஷமிகள் விஷம் வைத்தலால் 97 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் , பல கோழிகள் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
வளலாய் மேற்கு பகுதியை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று , தமது வாழ்வாதாரத்திற்காக கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோழி கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோழிகளுக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை  (31.05.25)விஷமிகள் விஷம் வைத்துள்ளனர். அதனால் 97 கோழிகள் உயிரிழந்துள்ளன.
தமது வாழ்வாதாரத்திற்காக வளர்த்த கோழிகளை விஷம் வைத்து கொன்றமையால், தாம் வாழ்வாதாரத்தை முற்றாக இழந்து நிர்க்கதியாக உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் அச்சுவேலி காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More