130



உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வேலனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டைத்தீவு பகுதியில் கண்டல் தாவரங்கள் நடுகை நிகழ்வு கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் போது, பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை கட்டுப்படுத்தல் பற்றி விழிப்புணர்வும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு, சுற்றாடல் தினம் பற்றிய உரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரர், யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




Spread the love