136
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில் யாழ்ப்பாணம் பல்கலைகழக தொல்லியல் துறை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மனித புதைகுழி காணப்படும் நிலையில் , முதல் கட்ட அகழ்வு பணிகளில் 19 மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
அந்நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளை 45 நாட்களுக்கு மேற்கொள்ள யாழ் . நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றதும் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னடுக்கப்படும் என எதிர்பார்க்க ப்படுகிறது.
இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்களையும் ஈடுபடுத்தும் முகமாக , அதற்கான அனுமதிகளை வழங்க வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரியினால் யாழ்ப்பாண பல்கலைகழகத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love